| ADDED : மார் 20, 2024 12:20 AM
ராமேஸ்வரம் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.தமிழகத்தில் ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் மக்களிடம் அச்சத்தை போக்கிட 100 சதவீதம் ஓட்டுப்பதிவு உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் கொடி அணிவிப்பு நடத்துவர். அதன்படி நேற்று ராமேஸ்வரம் போலீஸ் டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் துணை ராணுவ படை வீர்ர்கள், தமிழக கமாண்டோ போலீசார், ஆயுதப்படை போலீசார் என 121 பேர் ராமேஸ்வரம் வேர்க்கோடு முதல் பஸ் ஸ்டாண்ட் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.