குறுகிய இடத்தில் செயல்படும் பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட்
பயணிகள் நிற்க இடமில்லைபரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் விரிவாக்கம் செய்யப்படாமல் பயணிகள் நிற்க வசதியின்றி உள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் பார்த்திபனுார் பிரதானமாக உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து அருப்புக்கோட்டை, ராஜபாளையம், துாத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்துார், சாயல்குடி, கமுதி என பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் வந்து பிரிந்து செல்கின்றன. அருகில் உள்ள கிராமங்களுக்கும் டவுன் பஸ்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு முறை பஸ்கள் வரும் போதும் நிறுத்தி வைக்க இடமின்றி உடனுக்குடன் எடுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் இங்கு பயணிகள், பஸ்கள் வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்னரே வந்து காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை. ஆகவே பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் உள்ள இடத்தை விரிவு படுத்துவதுடன், மதுரை, ராமேஸ்வரம் ரோட்டோரம் பார்த்திபனுார் நுழையும் இடத்தில் உள்ள பகுதியில் விரைவு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிற்பதற்கு போதிய வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.