உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயணியர் நிழற்குடை கட்டும் பணி தீவிரம்

பயணியர் நிழற்குடை கட்டும் பணி தீவிரம்

முதுகுளத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் கடலாடி ரோடு மேலச்சாக்குளம் விலக்கு ரோடு மற்றும் காமராஜபுரத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது.முதுகுளத்துார் கடலாடி ரோடு மேலச்சாக்குளம் விலக்கு ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்த நிலையில் அகற்றப்பட்டது. மேலச்சாக்குளம் கிராம மக்கள் மற்றும் நீதிமன்றம் செல்லும் மக்கள் பஸ்சுக்காக ரோட்டோர மரத்தடியில் ஆபத்தான நிலையில் காத்திருந்து வந்தனர். பயணியர் நிழற்குடை இல்லாமல் சிரமப்பட்டனர். இதே போன்று முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு காமராஜபுரம் அருகே சேதமடைந்த பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.பி., தர்மர் நிதி ஒதுக்கீடு செய்து காமராஜபுரம் மற்றும் மேலச்சாக்குளம் விலக்கு ரோட்டில் புதிய பயணியர் நிழற்குடைகள் கட்டும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி