சண்முககுமாரபுரத்தில் சிமென்ட் கற்களால் பயணிகள் நிழற்குடை; அரசு நிதி வீணடிப்பு
சாயல்குடி; சாயல்குடி அருகே சண்முககுமாரபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் ரூ.4 லட்சத்தில் முழுவதும் சிமென்ட் கற்களை பயன்படுத்தி புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி நடந்து வருகிறது. பா.ஜ., கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜ சேகர பாண்டியன் கூறிய தாவது: சண்முககுமாரபுரத்தில் கட்டப்படும் பயணியர் நிழற்குடை கட்டடம் முழுவதும் சிமென்ட் கல் எனப்படும் கற்கள் பயன்படுத்தி கட்டப்படுகிறது. இவற்றின் தரம் உறுதியானது தானா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிக நிதி ஒதுக்கீட்டில் குறைந்த காலத்திற்கு மட்டுமே இது போன்ற கட்டடங்கள் தாக்கு பிடிக்கும். என வே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க செங்கல் மூலமாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். சண்முக குமாரபுரத்தில் பெருவாரியாக சாலை சேதமடைந்துள்ள நிலையில் புதிய தார் சாலை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.