உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் தொல்லை பயணிகள் அச்சம்

தொண்டி பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் தொல்லை பயணிகள் அச்சம்

தொண்டி : தொண்டி பஸ் ஸ்டாண்டில் இரவில் குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பெண் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.தொண்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து சிதம்பரம், நாகர்கோவில், திருச்செந்துார், ராமேஸ்வரம், மதுரை போன்ற நீண்ட துார பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவில் கடைசி பஸ்சுக்காக பஸ் ஸ்டாண்டிற்கு பெண்கள் கைக்குழந்தையுடன் செல்கின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் போது குடிமகன்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.பயணிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு 9:00 மணிக்கு மேல் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். கடைசி நேர பஸ்சுக்காக காத்திருக்கும் போது போதையில் சிலர் வம்பிழுக்கின்றனர். நேற்று முன்தினம் இரண்டு பேர் போதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.அவர்களின் நடவடிக்கையை பார்க்க சகிக்காமல் நின்று கொண்டிருந்தோம். பஸ்சுக்காக காத்திருப்பவர்களிடம் எந்த ஊருக்கு செல்கிறீர்கள். எதற்காக செல்கிறீர்கள் என்ற தேவையில்லாத கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். ரோந்து செல்லும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை