உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடுரோட்டில் தொடர்ந்து பஞ்சராகும் அரசு பஸ்களால் பயணிகள் சிரமம்

நடுரோட்டில் தொடர்ந்து பஞ்சராகும் அரசு பஸ்களால் பயணிகள் சிரமம்

முதுகுளத்துார்:முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் அரப்போது விலக்கு ரோட்டில் பஞ்சர் ஆனதால் பாதி வழியில் பயணிகள் இறக்கப்பட்டு சிரமப்பட்டனர். முதுகுளத்துாரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக ராமநாதபுரத்திற்கு அரசு டவுன் பஸ் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு மதியம் 2:00 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் அரப்போது விலக்கு ரோட்டில் பஞ்சர் ஆனது. இதனால் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து மக்கள் அவ்வழியே வரும் டூவீலர் மற்றும் வாகனங்களை நிறுத்தி லிப்ட் கேட்டு சென்றனர். இதனால் 1 கி.மீ., நடந்து சென்று கருமல் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மாணிக்கம் என்ற பெண் பயணி கூறியதாவது: முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் அரப்போது அருகே நடுவழியில் டயர் வெடித்து பஞ்சரானது எதிர்பாராவிதமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பஸ்சில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோர் பாதி வழியில் இறக்கி விடப்பட்டதால் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்வது குறித்து கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் பயணிகள் நடு ரோட்டில் சிரமப்பட்டனர். எனவே இனிவரும் நாட்களில் அரசு பணிமனையில் இருந்து பஸ் இயக்கப்படும் போது முழுமையாக சோதனை செய்து இயக்க வேண்டும் என்றார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சாயல்குடி டவுன் பஸ் 9ம் நம்பர் மற்றும் ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் நடுரோட்டில் பஞ்சர் ஏற்பட்டது. இந்த அவலநிலை தொடர்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ