உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச கழிப்பறை வசதி இல்லை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

இலவச கழிப்பறை வசதி இல்லை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

தொண்டி, : தொண்டி பஸ்ஸ்டாண்டில் இலவச கழிப்பறை வசதியில்லாததால் மறைவிடங்களில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.தொண்டி பஸ்ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, திருச்சி, சிதம்பரம், திருச்செந்துார் ஆகிய பகுதிகளுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ்ஸ்டாண்டில் கட்டண கழிப்பறை உள்ளது. ஆனால் இலவச கழிப்பறை வசதியில்லை. இதனால் கட்டணம் கொடுத்து கழிப்பறைக்கு செல்ல விருப்பம் இல்லாத சிலர் மறைவிடங்களில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றமாக உள்ளது. இது குறித்து தொண்டி ஹிந்து பரிபாலன சபை துணைத்தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:பஸ்ஸ்டாண்டில் உள்ள கழிப்பறைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் ஆங்காங்கே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றமாக உள்ளது. ஆகவே கட்டண கழிப்பறையை இலவச கழிப்பறையாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !