உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் நிழல் கூரை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

பஸ் ஸ்டாண்டில் நிழல் கூரை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

பஸ் ஓரத்தில் நிற்பதால் விபத்து அபாயம்பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை வசதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை ஒட்டியபடி பயணிகள் நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ராமநாத புரம் ரோட்டோரம் உள்ளது. நகரில் இருந்து ராமநாதபுரம், மதுரை என அரசு மற்றும் தனியார் வேலைக்கு பல்லாயிரம் பேர் சென்று வருகின்றனர். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள், கூலி வேலைக்கு வருவோர் என ஆயிரக்கணக்கானோர் பரமக்குடிக்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா ஆன்மிக தலத்திற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் எந்தவிதமான நிழற்குடை வசதியும் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். அடிக்கும் வெயிலுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் நிழலை நாடும் நிலை உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்கள் செல்லும் நிலையில் பயணி களுக்கு விபத்து அபாயம் இருக்கிறது. ஆகவே பஸ் ஸ்டாண்டில் கடைகளுக்கு அடுத்து நடை மேடையை ஆக்கிரமிக்கும் செயலை அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும். மேலும் நகராட்சி சார்பில் ஒட்டு மொத்தமாக பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் இடம் உட்பட, நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை