உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் கூரை வசதியின்றி மழை, வெயிலில் பயணிகள் பாதிப்பு

பஸ் ஸ்டாண்டில் கூரை வசதியின்றி மழை, வெயிலில் பயணிகள் பாதிப்பு

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் கூரை வசதி இல்லாமல் பயணிகள் மழை வெயிலில் ஒதுங்கி இடமின்றி சிரமப்படுகின்றனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரிய நகராட்சியாக உள்ள பரமக்குடியுடன் தற்போது தெளிச்சாத்தநல்லுார், உரப்புளி, வேந்தோணி, அண்டக்குடி ஆகிய ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட உள்ளன. இந்நிலையில் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் தினந்தோறும் பரமக்குடி பணிமனையிலிருந்து 80க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் மற்றும் தொலைதுார பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பல இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரம் வழித்தடத்தில் முக்கிய பஸ் ஸ்டாண்ட் ஆக உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் பல ஆயிரம் பயணிகள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். ஆனால் பஸ் ஸ்டாண்டில் மக்கள் நிற்கும் அளவிற்கு கூட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இங்குள்ள கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் வராண்டாவில் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கிறது. மழை, வெயிலில் தவிக்கின்றனர். ஆகவே பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் வகையில் பயணிகளின் வசதி கருதி கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை