உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் பதநீர் சீசன் துவக்கம்: லிட்டர் ரூ.100 

தொண்டியில் பதநீர் சீசன் துவக்கம்: லிட்டர் ரூ.100 

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் பதநீர் சீசன் துவங்கியுள்ளது. லிட்டர் ரூ.100க்கு விற்கிறது. சில நாட்களாக பதநீர் சீசன் துவங்கியதால் தொண்டியில் லிட்டர் ரூ.100க்கு விற்கின்றனர். நோய் எதிர்ப்பு கொண்டது, உடலுக்கு நல்லது என்பதால் பதநீரை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். வியாபாரிகள் கூறியதாவது: தேவிபட்டினத்தில் பனைமரங்களில் பதநீர் இறக்கி, இங்கு கொண்டு வந்து விற்கிறோம். இயற்கை மருத்துவ குணம் கொண்டது. ஒரு டம்ளர் (கால் லிட்டர்) ரூ.30க்கு விற்பனை செய்கிறோம். வெயில் காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்