மேலும் செய்திகள்
திருவாடானை காங்., மண்டல தலைவருக்கு 15 பேர் மனு
6 minutes ago
ஆடு திருட்டு 2 பேர் கைது
15 minutes ago
இருவர் அடித்து கொலை; உறவினர்கள் போராட்டம்
9 hour(s) ago
கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பலி
9 hour(s) ago
தொண்டி: திருவிழாக்களில் கூம்பு ஒலிபெருக்கி அதிகமாக இருப்பதால் நோயாளிகள் பாதிக்கபட்டுள்ளனர். தொண்டி, திருவாடானை பகுதியில் கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. இந்த விழாக்களில் மரக்கிளைகளில் அதிக துாரத்திற்கு சத்தத்தை கொண்டு சேர்க்கும் திறன் கொண்ட கூம்பு ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுகிறது. இந்த ஒலிபெருக்கிகள் அமைக்க தடை இருந்த போதும் தடையை மீறி கூம்பு ஒலிபெருக்கிகள் கட்டபடுகிறது. அதிகபடியான சத்தத்தால் இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் துாக்கத்தை இழந்து தவிக்கின்றனர். தேர்வு நேரங்களில் திருவிழாக்கள் வரும் போது மாணவர்கள் கவனசிதறலுக்கு ஆளாகிகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு செவிதிறன் பாதிக்கபடுகிறது. அனுமதிக்கபட்ட அளவை மீறி கூம்பு ஒலிபெருக்கிகளை அமைப்போர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூம்பு ஒலிபெருக்கிகளுக்கு பதிலாக பாடல் சத்தத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் பரப்பும் நவீன பாக்ஸ் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அமைப்பாளர்கள் முன்வரவேண்டும்.
6 minutes ago
15 minutes ago
9 hour(s) ago
9 hour(s) ago