உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு! பொதுப் பிரிவில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி 

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு! பொதுப் பிரிவில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பொது மருத்துவப் பிரிவில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். ராமநாதபுரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர மகப்பேறு, குழந்தைகள் மருத்துவப்பிரிவு தனியாக இயங்கி வருகிறது. இங்குள்ள பொது சுகாதாரப்பிரிவில் 16 டாக்டர்கள் பணிபுரிய வேண்டும். தற்போது 6 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் ஓய்வு கூட எடுக்க முடியாத நிலையில் இங்குள்ள டாக்டர்கள் பணிபுரிகின்றனர். பொது சுகாதாரப்பிரிவில் தினமும் புற நோயாளிகள் 500 முதல் 800 பேர் வருகின்றனர். இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்த பின் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு, ஆண், பெண் உள் நோயாளிகளுக்கான வார்டு, நச்சு நீக்கும் பிரிவு, ஆண், பெண் அறுவை சிகிச்சை வார்டு, நெப்ராலஜி வார்டு என அனைத்துப் பகுதியிலும் உள்ள உள் நோயாளிகள் 100 முதல் 150 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கின்றனர்.இதன் காரணமாக டாக்டர்கள் ஓய்வு இல்லாமல் பணிபுரிவதால் மன உளைச்சலில் உள்ளனர். இது தவிர 24 மணி நேரம் கண்காணிப்பில் உள் நோயாளிகள் உள்ளனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் போதிய டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என்பது பெயரில் மட்டும் இருந்தால் போதது. அதற்கான தகுதிக்கேற்ப அனைத்து கட்டட வசதி, அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் இருந்தும் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் நோயாளிகள் தவிக்கின்றனர். புற நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் உள் நோயாளிகளை ஒரு நாளைக்கு ஒரு முறை டாக்டர்கள் கண்காணித்து ஆலோசனைகள் கூட வழங்க முடியாத நிலை உள்ளது. போதுமான டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்