ஓய்வூதியர் தின விழா
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் ராமச்சந்திர பாபு வரவேற்றார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர்கள் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் விஜயராகவன், ராமநாதபுரம் கூடுதல் கருவூல அலுவலர் காதர் மொய் தீன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அப்துல் நாஜுமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.