உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி முன் ஆபத்தான பள்ளத்தால் மக்கள் அச்சம்

பள்ளி முன் ஆபத்தான பள்ளத்தால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு கடந்த பருவமழை காலத்தில் கிராமத்தில் வீடுகளுக்குள் நுழைந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக பள்ளி முன்பு கால்வாய் தோண்டப்பட்டு தண்ணீரை வெளியேற்றினர்.அதற்கு பிறகு கால்வாயை மூடப்படாமல் விடப்பட்டுள்ளது. தற்போது பள்ளம் ஏற்பட்டு கிராமத்தில் நடந்து செல்லும் பெண்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கிராம மக்களின் நலன் கருதி தண்ணீர் செல்வதற்காக கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ