உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளால் மக்கள் அச்சம்

ராமநாதபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளால் மக்கள் அச்சம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவற்றை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம் காத்தான் உள்ளிட்ட நகர் பகுதிகளில் குரங்குகள் திரிகின்றன. இவை தென்னை மரங்களில் ஏறி காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. நேற்று தினமலர் நகர், மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் இரண்டு குரங்குகள் வீடுகளில் காம்பவுண்ட் சுவர், தென்னை மரங்களில் தாவி குதித்தன. இவை வீட்டிற்குள் வந்து விடுமோ என பெண்கள், சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே ராமநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளைபிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை