உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவில் ரோட்டில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி

நயினார்கோவில் ரோட்டில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றிய அலுவலக ரோடு பராமரிப்பு இன்றி மண் காற்றில் பறப்பதாலும், மழை பெய்யும் போது சகதி காடாவதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோடு வழியாக ராமநாதபுரம், தேவிபட்டினம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வருடம் முழுவதும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த வருகை தருகின்றனர். தொடர்ந்து குளக்கரையை ஒட்டிய ரோடு மணல்மேடாக இருக்கிறது.வாகனங்கள் தொடர்ந்து செல்லும் போது காற்றில் புழுதி பறந்து அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் பஸ்களில் செல்வோம் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர். இதேபோல் கோயிலை சுற்றிய ரோடு மோசமான நிலையில் இருக்கிறது. தொடர்ந்து சிறிதளவு மழை பெய்யும் பொழுதும் அனைத்து ரோடும் சகதி காடாகிறது. இப்பகுதியில் சுவாமி வீதி வலம் வருவதில் சிக்கல் உண்டாகிறது. வரும் நாட்களில் வைகாசி வசந்த விழா நடக்க உள்ள சூழலில் தேரோட்டம் முக்கிய நிகழ்வாக நடக்கும்.ஆகவே நயினார்கோவில் ரோடு மற்றும் கோயிலை சுற்றி உள்ள ரோடு முறையாக பராமரிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி