உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தெருவிளக்கு, குடிநீர் வசதியின்றி முதுகுளத்துாரில் மக்கள் அவதி

தெருவிளக்கு, குடிநீர் வசதியின்றி முதுகுளத்துாரில் மக்கள் அவதி

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே குடியிருப்புகளுக்கு தெரு விளக்கு, குடிநீர் வசதி இல்லாததால், டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.முதுகுளத்துார் - சாயல்குடி சாலை நீதிமன்றம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே தண்ணீர் வசதி தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தினந்தோறும் டிராக்டர் தண்ணீரை வாங்கி தொட்டியில்நிரப்பி வைத்து அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அவசர நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் பணியாளர்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இரவுநேரத்தில் வெளியே செல்வதற்கும் மக்கள் அச்சப்படுகின்றனர். சிலர் வீடுகளை கட்டிவிட்டு இன்னும் வாடகை வீட்டிலே வாழ்கின்றனர். எனவே மக்களின் வசதிக்காக தெருவிளக்கு, தண்ணீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிவாகம் செய்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி