மருந்துகளால் பக்க விளைவு மக்கள் புகார் தெரிவிக்கலாம்
ராமநாதபுரம்: மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை கியூஆர் குறியீடு, உதவி எண் மூலம் தெரிவிக்கலாம். அரசு மருத்துவமனைகளில் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை கண்டறியும் முயற்சியாக தமிழக அரசு கியூஆர் குறியீடு மற்றும் உதவி எண்ணை வெளியிட்டது. இதன் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள், மருத்துவ மனையை உபயோகிக்கும் மக்கள் என அனைவரும் பக்கவிளைவுகள் குறித்து தகவல் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்துறை ஊழியர்கள் பக்கவிளைவு தெரிவிக்கும் படிவத்தை பூர்த்தி செய்து மருந்தாக்கியல் கண்காணிப்பு மையத்தில் வழங்குவர். பொதுமக்கள் 1800 180 3024 என்ற உதவி எண் மூலம் தெரிவிக்கலாம். இதன் மூலம் மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்த தரவுகள், மாற்று மருந்துகள் வழங்குதற்கான பரிந்துரைகள் வழங்கப்படும் என ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருந்தியல் துறையினர் தெரிவித்தனர்.