அடிப்படை வசதி செய்துதர மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: கடலாடி ஒன்றியம் மேலச்சிறுபோது ஊராட்சி எஸ்.குளம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு பஸ் போக்குவரத்து, ரோடு, குளியல் தொட்டி வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.எஸ்.குளம் கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதில் ஊரில் குடிநீர் சரியாக வருவது இல்லை. பணம்கொடுத்து வாங்குகிறோம். ரோடு பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். உயர்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.