மேலும் செய்திகள்
ரோட்டை மறைக்கும் சீமைக்கருவேல மரங்கள்
12-Sep-2025
திருவாடானை : சமத்துவபுரம் சுடுகாட்டிற்கு செல்லும் ரோட்டின் இரு பக்கமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் இறந்தவர்களின் உடலை துாக்கி செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவாடானையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் உள்ளது. இங்கு குடியிருப்பவர்களின் வசதிக்காக தனியாக சுடுகாடு அமைக்கப்பட்டது. சுடுகாட்டிற்கு செல்லும் வகையில் தார் ரோடும் அமைக்கப்பட்டது. தற்போது ரோட்டின் இருபக்கமும் சீமைக்கருவேலம் மரங்கள் அடர்ந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இங்கிருந்து 1 கி.மீ., துாரத்தில் சுடுகாடு உள்ளது. இரு பக்கமும் சீமைக்கருவேலம் அடர்ந்திருப்பதால் இறந்தவர்களின் உடலை துாக்கி செல்பவர்கள் முட்கள் குத்தி காயமடைகின்றனர். சில நேரங்களில் தடுமாறுவதால் உடல் கீழே விழும் அபாயம் உள்ளது. சுடுகாடு அருகே குளம் இருப்பதால் அங்கு குளிப்பது வழக்கம். இதனால் இந்த ரோட்டில் நடந்து செல்வோர் அதிகம். ரோடும் பராமரிப்பு இல்லை. ரோட்டின் இரு பக்கமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி ரோட்டை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
12-Sep-2025