உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மயானம் அமைத்து தர மக்கள் கோரிக்கை

மயானம் அமைத்து தர மக்கள் கோரிக்கை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் மயானம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் அருகே சாத்தனுார் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பனேந்தல் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் மயானவசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கு மயானம் இல்லாமல் கேளல், அப்பனேந்தல் செல்லும் ரோட்டோரத்தில் உடலை புதைக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் தற்போது போதுமான அளவு இட வசதி இல்லாததால் மேலும் ஏற்கனவே புதைத்தவர்களின் உடல் மேலே புதைக்கப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கிராம மக்கள் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி