உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவில் ரோட்டோரம் எரிக்கப்படும் சீமைக்கருவேலம் விபத்து அச்சத்தில் மக்கள்

நயினார்கோவில் ரோட்டோரம் எரிக்கப்படும் சீமைக்கருவேலம் விபத்து அச்சத்தில் மக்கள்

நயினார்கோவில்: பரமக்குடியில் இருந்து நயினார்கோவில் செல்லும் ரோட்டோரம் சீமைக்கருவேல மரங்கள் எரிக்கப்படுவதால் விபத்து அச்சத்தில் மக்கள் உள்ளனர்.பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளது. தொடர்ந்து வேளாண் துறை மூலம் பாசன பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறும் சூழலில் அவற்றை சுத்தப்படுத்த கருவேல மரங்களை தீயிட்டு அழிக்கின்றனர். அப்போது ரோட்டோரம் நடப்படும் மரக்கன்றுகள் வீணாகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் கேபிள் சேதமடையும் நிலை உள்ளது.தொடர்ந்து அருகில் உள்ள குடியிருப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் பாதிக்கின்றனர். ஆகவே கருவேல மரங்களை தீயிட்டு அழிப்பதை தடுத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி