மேலும் செய்திகள்
காவிரி கூட்டு குடிநீர் புனரமைப்பு பணி தொய்வு
19-Mar-2025
ராமநாதபுரம்: -நாளை (மார்ச் 21) முதல் ராமநாதபுரத்தில் புத்தகக்கண்காட்சி நடக்கவுள்ளதால் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 வது புத்தகக்கண்காட்சி நாளை முதல் மார்ச் 30 வரை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது. காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகள், கோளரங்கம், அறிவியல் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, பயிற்சி பட்டறை, கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சாளர்களின் சிறப்புரை, மண்ணின் படைப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பாராட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
19-Mar-2025