உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மன நோயாளிகள் அதிகரிப்பால் திருவாடானை மக்கள் அச்சம் 

மன நோயாளிகள் அதிகரிப்பால் திருவாடானை மக்கள் அச்சம் 

திருவாடானை: திருவாடானையில் சாலையில் சுற்றித்திரியும்மன நோயாளிகளை பார்த்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவாடானை, தொண்டியில் பஸ்ஸ்டாண்ட், கோயில்கள்அருகே மற்றும் சாலை ஓரங்களில் மனநோயாளிகள் சுற்றித்திரிகின்றனர்.இதில் சிலர் கையில் கம்புடன் திரிகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பெண்கள் சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர்.பஸ் ஸ்டாண்ட்களில் அருவருக்கத்தக்க வகையில் நீண்டநேரம் நிற்பதால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். குழந்தைகள் கல்லுாரிக்கு செல்லும் மாணவிகள் உட்பட அனைவரும் மன நோயாளிகளின் நடத்தையை பார்த்து அச்சமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.கிராமங்களில் உள்ள நிழற்குடைகளில் மன நோயாளிகள் தங்கியிருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். தெருக்களில் செல்லும் இவர்களை சிலர் தாக்குவதும், துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது.மன நோயாளிகளை காப்பகங்களில் சேர்த்து உணவளித்து, முறையான மருத்துவ சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்