உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கிராமத்தில் புகுந்த கண்மாய் நீர் பஸ் மறியலில் ஈடுபட்ட மக்கள்

 கிராமத்தில் புகுந்த கண்மாய் நீர் பஸ் மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருவாடானை: கிராமத்திற்குள் புகுந்த கண்மாய் நீரை தடுக்கக் கோரி வில்லாரேந்தல் கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை அருகே நாவலுார் கண்மாய் நிரம்பியதால் உபரி நீர் கலுங்கு வழியாக வெளியேறுகிறது. அந்த நீர் வில்லாரேந்தல் குடியிருப்பில் புகுவதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே கண்மாய் நீரை மதகு வழியாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வில்லாரேந்தல் மக்கள் நேற்று காலை வெள்ளையபுரத்தில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து திருவாடானை தாசில்தார் ஆண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாவலுார் கண்மாய் நீரை மதகு வழியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். அதனை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ