நெல் வயலில் நிரந்தர பூச்சி கண்காணிப்பு திடல் அமைப்பு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி மற்றும் களரி உள்ளிட்ட கிராமங்களில் வயல்வெளிகளில் நிரந்தர பூச்சி கண்காணிப்பு திடல் அமைக்கும் பணி நடக்கிறது.பெரும்பாலான இடங்களில் நெல் வயல்களில் பூச்சி தாக்குதல் மற்றும் சத்துக் குறைபாடு உள்ளதா என்பதை வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இதன்பபடி திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு ஊராட்சிகளில் உள்ள நெல் வயலில் நான்கு அடி உயர இரும்பு குச்சிகளை மூன்று அடி இடைவெளியில் நான்கு புறமும் ஊன்றி கண்காணிக்கப்படுகிறது.திருப்புல்லாணி வேளாண் துறையினர் கூறுகையில், நெல் வயலில் பூச்சி தாக்குதல், புதிய வகை புழுக்கள் மற்றும் பயிர்களின் வளர்ச்சி, ஊட்டம் உள்ளிட்டவைகளை கண்டறிவது அவசியம். இதற்காக கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.இதன் மூலம் கண்டறியப்படும் தரவுகள் பட்டியலிடப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.