உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மலேசியா சென்ற கணவரை மீட்க கோரி எம்.எல்.ஏ., விடம் மனு

மலேசியா சென்ற கணவரை மீட்க கோரி எம்.எல்.ஏ., விடம் மனு

திருவாடானை: மலேசியா சென்ற கணவர் அங்கிருந்து திரும்பி வர வழியின்றி தவிப்பதாகவும் அவரை மீட்டுதரக் கோரி எம்.ல்.ஏ., விடம் மனைவி கொடுத்தார். திருவாடானை அருகே அரசத்துார் ஊராட்சி கெங்கைவிலாசம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி டேவிட் 50. மனைவி, ஒரு மகன் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டல் வேலைக்காக மலேசியாவிற்கு சென்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால் நேற்று திருவாடானை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., கருமாணிக்கத்திடம் டேவிட் மனைவி ஆரோக்கியமேரி கணவரை மீட்க கோரி மனு கொடுத்தார். இது குறித்து ஆரோக்கியமேரி கூறியதாவது: இங்கு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பிழைப்புக்கு வழியில்லாமல் என்னுடைய நகையை விற்று ஒரு ஏஜன்டிடம் பணம் செலுத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு எனது கணவர் டேவிட் சென்றார். அங்கு அவருக்கு ஒரு ஓட்டலில் வேலை கிடைத்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. அவருடைய அலைபேசி சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. எனது கணவர் மலேசியாவில் தங்கியிருந்த இடம் சாலம் செக்சன், சாலை கிரிமுடா வீட்டு எண் 2, நான்காவது மாடி. வாடகை வீட்டுக்காரரின் பெயர் ரஜினி. அவரது மனைவி கீதா ஆகிய இருவரும் எனது கணவரை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வேறு நபர் மூலமாக கிடைத்துள்ளது. எனது கணவரின் பாஸ்போர்ட்டையும் பறித்து கொண்டுள்ளார்கள். கணவரை மீட்டுத்தர எம்.எல்.ஏ., விடம் மனு கொடுத் துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி