புனித பயணம் குறித்த வழிகாட்டி கருத்தரங்கம்
கீழக்கரை: கீழக்கரையில் உள்ள மகாலில் பிளாக் அண்ட் ஒயிட் குரூப் ஆப் கம்பெனி சார்பில் புனித பயணம் மேற்கொள் வோருக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது. மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜாமியா சிராஜுதீன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஹாஜா கனி முன்னிலை வகித்தார். உசேன் பாஷா வரவேற்றார். நிகழ்ச்சியை முகமது சிராஜுதீன் தொகுத்து வழங்கினார். உம்ரா என்பது முஸ்லிம் களின் ஒரு புனித பயணம். இது ஆண்டின் எந்த நேரத்திலும் சவுதி அரேபியாவில் இருந்து புனித நகரமான மெக்காவிற்கு செல்லக் கூடியதாகும். இது ஹஜ் பயணத்தை போன்றது. ஆனால் ஹஜ் ஒரு கட்டாயக் கடமை. உம்ரா என்பது ஒரு விருப்பமான செயல். சிறிய யாத்திரை என்று அழைக்கப்படுகி றது. உம்ரா ஒரு தனிப்பட்ட ஆன்மிக அனுபவமாகவும், ஒருவரின் பாவங்களை மன்னிக்கவும், கடவுளுடன் நெருக்கமாக இருக்கவும் ஒரு வழியாக கருதப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிராஜ் மரைக்காயர் வழிகாட்டுதல் குறித்து கூறினார். இந்நிகழ்ச்சியில் ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் நிறுவனர் இன்ஜினியர் கீழை இர்பான், கீழக் கரையைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிப் மற்றும் பாயிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.