உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் பிளக்ஸ் போர்டுகள்

பரமக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் பிளக்ஸ் போர்டுகள்

பரமக்குடி : பரமக்குடி பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் கலாசாரம் அதிகரிக்கும் சூழலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படுகிறது.பொதுவாக ஒவ்வொரு விபத்துக்கு பிறகும் அது தொடர்பான வரைமுறைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு மேற்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு நிலைகளில் பிளக்ஸ் பேனர்களால் விபத்துகள் நடந்து உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பரமக்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளக்ஸ் பேனர்களைகட்டுவது அதிகரித்துள்ளது.நீதிமன்ற வழிகாட்டுதலின் படியோ அல்லது நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகளின் அனுமதியின் பேரிலோ இதுபோன்ற போர்டுகள் வைப்பதாக தெரியவில்லை.பேனர்களை வைப்பவர்களும் பொது மக்களின் கண்ணில் படும்படி பொது இடங்களில் உள்ள மின்சார கம்பங்கள் மற்றும் ரோட்டோரத்தில் மூங்கில் கம்புகளை நட்டு கட்டி வைத்து செல்கின்றனர்.இவை காற்றின் வேகத்தால் சாய்ந்து விபத்துகளை உண்டாக்குகிறது. மேலும் பிரதான நான்கு வழி சாலை மற்றும்எதிரும் புதிருமாக வரும் வாகனங்களை பார்க்க முடியாத வகையில் பேனர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது.இதேபோல் மகால்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அருகில் பேனர்கள் பாதுகாப்பற்ற முறையில் வைப்பதால் விபத்து தவிர்க்க முடியாததாகிஉள்ளது.எனவே விபத்துக்கு பின்னர் பொறுப்பு ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பேனர்களை வைப்பதற்கு முறையான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ