பனை விதை நடவு
சாயல்குடி: சாயல்குடியில் நா.த.,கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் அவதா ண்டை கிராமத்தில் சாலையோரங்களில் பனைமர விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அழிந்து வரும் பனை மரத்தை காப்பது குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. பனைமரத்தின் பயன்கள் அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.