மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலத்தில் மழை
06-Aug-2025
ஆடியில் உழவுப்பணியை துவக்கிய விவசாயிகள்
23-Jul-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார், ராதானுார், திருத்தேர்வளை, கூடலுார், நத்தக்கோட்டை, துவார், கோவிந்தமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால், விவசாய நிலங்களில் உழவு பணிக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுகிறது. இந்நிலையில், இன்னும் சில வாரங்களில் நெல் விதைப்பு பணியை மேற்கொள்ளும் வகையிலும், மண் வளத்தை மேம்படுத்தும் வகை யிலும், டிராக்டர் மூலம் உழவுப் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆடிப்பட்டத்தில் நெல் விதைப்பு மேற்கொள்ளும் வகையில் வயல் வரப்புகள் சீரமைத்தல், வாய்க்கால் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளையும் விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
06-Aug-2025
23-Jul-2025