உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமத் தலைவர் கொலையில் மகனிடம் போலீஸ் விசாரணை

கிராமத் தலைவர் கொலையில் மகனிடம் போலீஸ் விசாரணை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிராம தலைவர் காசிலிங்கம் 65, கொலையில் மகனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம் 65. கிராமத் தலைவரான இவர் ஏப்.27ல் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள சீமைக்கருவேலம் காட்டில் கிடந்தார். காசிலிங்கத்தின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் தனது ஊரான குயவனேந்தலில் மகளுடன் வசித்து வந்துள்ளார். மகன் கண்ணன் 40, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காசிலிங்கம் தனது மகள் பராமரிப்பில் இருந்து வந்ததால் மகளுக்கு ஊரில் உள்ள சொத்து, மற்றும் பணம் கொடுத்து வந்துள்ளார்.இதனால் மகன் கண்ணனுக்கு தந்தை மீது கோபம் இருந்துள்ளது. இந்த நிலையில் காசிலிங்கம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதால் மகன் கண்ணன் மீது சந்தேகம் அடைந்த திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் கண்ணனிடம் ரகசிய இடத்தில் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி