மேலும் செய்திகள்
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
11-May-2025
ராமேஸ்வரம்,:தடையை மீறி தனுஷ்கோடியில் பறக்க விடப்பட்ட ட்ரோனை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரிடம் விசாரிக்கின்றனர்.ராமேஸ்வரம், தனுஷ்கோடி முதல் இலங்கை வரை குறுகிய கடல் எல்லை பகுதியாக உள்ளதால் ட்ரோன் பறக்க விட மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று மாலை சிலர் தடையை மீறி தனுஷ்கோடி கடல் பகுதியில் ட்ரோன் பறக்க விட்டு அப்பகுதியை வீடியோ எடுத்துள்ளனர். தனுஷ்கோடி போலீசார் ட்ரோன், அதில் இருந்த கேமராவை பறிமுதல் செய்தனர். இதனை பறக்க விட்ட புதுக்கோட்டை சேர்ந்த 5 பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
11-May-2025