பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.நாட்டின் 76வது குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாம்பன் கடலில் ரூ. 530 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலத்தில் அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., முத்துமுனியசாமி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் புதிய பாலத்தில் ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நுழைவு வாசலில் தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்திலும் போலீசார் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.