மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
8 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
8 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
8 hour(s) ago
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் மக்கள் தரிசனம் செய்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.மேலும் புத்தாடை உடுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும் புதுப் பானையில் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். மேலும் சூரியன் தன் வட திசை பயணத்தை தொடங்கும் நாளாக தை முதல் நாள் உள்ளது.*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாள் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் காலை 5:30 மணிக்கு திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மார்கழி மாதத்தில் ஆண்டாள் தன் சன்னதியில் இருந்து பெருமாளிடம் சேர்க்கை ஆகி இருந்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு மேள, தாளம் முழங்க தனிச் சன்னிதியை அடைந்தார்.*மேலும் அனுமார் கோதண்டராமசாமி கோயில், முத்தாலம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஈஸ்வரன் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் பக்தர்கள் தரிசனம் செய்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.--
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago