உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூங்குளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

பூங்குளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பூங்குளம் கிராமத்தில் பொற்கொடியாள் சமேத பூங்குளத்து அய்யனார், லாடசன்னியாசி, ஆஞ்சநேயர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.ஜுன் 3ல் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் துவங்கி ஐந்து கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சோம கும்ப பூஜை, துவாதச பாலிகை பூஜை, ஆறாம் கால யாகசால பூஜை முடிந்து கடம் புறப்பட்டு பிறகு மண்டைக்காடு பகவதி அம்மன்கோயில் மேல்சாந்தி பகவதி குருக்கள் தலைமையில் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.மூலவரான பூங்குளத்து அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், விபூதி, மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மாலை 508 விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !