உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார்களில் அகற்றப்படாத உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட பதவி போர்டுகள்: மக்கள் மத்தியில் குழப்பம்

கார்களில் அகற்றப்படாத உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட பதவி போர்டுகள்: மக்கள் மத்தியில் குழப்பம்

பரமக்குடி: ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சிகளில் பதவிக்காலம் முடிந்து தனி அலுவலர்கள் பொறுப்பில் இருந்த போதும் பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பழைய உள்ளாட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவி வகித்தவர்களின் கார்களில் போர்டுகளை அகற்றாமல் உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று பதவி அடைந்தவர்கள் தங்களது கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பெயர் பலகைகளை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். முக்கியமாக ஊராட்சி தலைவர்கள் உட்பட உள்ளாட்சி வார்டு கவுன்சிலர்கள் வரை இது போன்ற போர்டுகளை வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பதவிகள் முடிவு பெற்ற நிலையில் அனைத்து அலுவலகங்களிலும் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பதவி முடிந்த பிறகும் தங்களது கார்களில் போர்டுகளை அகற்றாமல் உள்ளதுடன் முன்னாள் தலைவர் அல்லது உறுப்பினர் என்ற வார்த்தையையும் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் தலைவர் பதவியில் நீடிக்கிறார்களோ என்ற குழப்பம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை கண்காணித்து முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி