முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார், மாவட்ட துணைத்தலைவர் ராமர்வேல், கல்வி மாவட்ட துணைத்தலைவர் பழனி முருகன், இணைச் செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நடப்பு ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதிவி உயர்வு நடத்துவதற்கான அறிவிப்பும், அட்டவணையும் வெளியிட வேண்டும்.கல்வி கூடங்களில் கலெக்டர்கள், முறைசாரா அலுவலர்கள் தலையீடுகளையும், தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.மாவட்ட பொருளாளர் திருமூர்த்தி, செயலாளர் மாரிசாமி, உதவி பெறும் பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். கல்வி மாவட்டத் தலைவர் செய்யது இஸ்மாயில் நன்றி கூறினார்.