ரயில்வே மேம்பாலத்தில் பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் இருந்து கீழக்கரை செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ரோட்டோரம் மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் இருந்து கீழக்கரை, திருப்புல்லாணி, சாயல்குடி என துாத்துக்குடி, திருச்செந்துார் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே கீழக்கரை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ரோடு பராமரிப்பின்றி பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் வாகனங்கள் வேகமாக வரும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே உயிர் இழப்பிற்கு முன்னதாக ரயில்வே மேம்பாலம் ரோட்டை சீரமைக்க தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.