உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகாத்மா காந்தி நகர் பகுதியில் குண்டும் குழியுமான ரோடால் விபத்து அபாயம்

மகாத்மா காந்தி நகர் பகுதியில் குண்டும் குழியுமான ரோடால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தி நகர் 8வது தெரு பகுதியில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.மகாத்மாக காந்தி நகர் பகுதியை ராமேஸ்வரம் மெயின் ரோட்டுடன் இணைக்கும் பகுதியில் இருந்து பாதி துாரம் மட்டும் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 மீ., ரோடு அமைக்கப்படாமல் உள்ளது. மகாத்மா காந்தி நகர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த ரோட்டின் வழியாகத்தான் செல்கின்றனர். இங்கு ரோடு குண்டும்குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தப்பகுதியில் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரோடு எங்கிருக்கிறது என தெரியாமல் வாகனங்கள் செல்லும் போது விபத்தில் சிக்குகின்றன. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும்நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை