மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
11-Oct-2025
ராமநாதபுரம்: சோமவார பிர தோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் மாலை 4:30 மணிக்கு நந்தி, மூலவருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மனுடன் உட்பிரகாரத்தை வலம் வந்தார். இதே போல நீலகண்டி ஊருணி அருகேயுள்ள காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயில், பர்வதர்வர்த்தினி சமேத ராமநாதசுவாமி கோயில், முகவை ஊருணி அருகேயுள்ள காசிவிஸ்வநாதர் கோயில், வெளிபட்டணம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், குமரய்யா கோவில் ரோட்டில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரர், மூலவர் சிவபெருமான், அம்மனுக்கு அபிேஷக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
11-Oct-2025