உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவப் பெண்களுக்கு இறால் ஊறுகாய் பயிற்சி

மீனவப் பெண்களுக்கு இறால் ஊறுகாய் பயிற்சி

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா மீனவர்களுக்கு சிறப்பு வாழ்வாதார திட்டத்தின் கீழ் மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயார் செய்யும் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் மீனவர்களுக்கு வருவாய் தரும் மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளர்கள் அபுதாகிர், மோனிகா செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ