உள்ளூர் செய்திகள்

மழை வேண்டி வழிபாடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு வாழவந்த அம்மன் கோயிலில் மழை வேண்டி புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் பூஜை பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. வாழவந்த அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திருப்புல்லாணி மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை