நவபாஷாணத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
தேவிபட்டினம்: நாளை தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக ஆடி, தை அமாவாசை நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக வருகின்றனர். இந்நிலையில் நாளை (ஜன.29) தை அமாவாசை என்பதால் பல்லாயிரம் பக்தர்கள் கடற்கரைக்கு வருவார்கள். இதனால் பக்தர்களின் கூட்டம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்புகள் அமைத்து பக்தர்களுக்கு உள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகளை உருவாக்கியுள்ளனர். மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.