உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / படைவீரர்கள் குடும்பங்களுக்கு  அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

படைவீரர்கள் குடும்பங்களுக்கு  அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் மனுக்கள் குறித்து விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.பின்னர் முன்னாள் படைவீரர்கள் குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் அர்ஜீனன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை