நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கமுதி; கமுதி அருகே ஊ. கரிசல்குளத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. அப்போது பல்வேறு துறைகள் சார்பில் அமைத்திருந்த சாதனை விளக்க கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். பின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இயற்கை மரண உதவித்தொகை, இ-பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை, பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டம் தோட்டக்கலைத்துறை திட்டங்களில் 256 பேருக்கு ரூ.31.87 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து 124 பேர் மனுக்கள் அளித்தனர். பெறபட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறினார். பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, தாசில்தார்கள் காதர் முகைதீன், சேதுராமன், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், சந்திரமோகன் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.