உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ரூ.6.71 கோடியில்  பொது வசதியாக்கல் மையம் திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ.6.71 கோடியில்  பொது வசதியாக்கல் மையம் திறப்பு

ராமநாதபுரம் :ராமநாதபுரத்தில் கைவினை திட்ட துவக்க விழாவில் நகை உற்பத்தியாளர்கள் குழுமம் பயனடையும் வகையில் தமிழக அரசின் மானிய திட்டத்தில் ரூ.6 கோடியே 71 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் பொது வசதியாக்கல் மையம் திறக்கப்பட்டது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பரமக்குடி முருகேசன், திருவாடானை கருமாணிக்கம் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகை உற்பத்தியாளர் குழுமத்தில் குத்துவிளக்கேற்றி பொது வசதியாக்கல் மைய உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டனர்.கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் கைவினை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.மாவட்ட தொழில் மைய மேலாளர் திரிபுரசுந்தரி, தொழில் மைய ஆய்வாளர் கணேஷ்குமார், நகை உற்பத்தியாளர் குழும தலைவர் உமா, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி