மேலும் செய்திகள்
செங்கையில் 33 பேருக்கு மனை பட்டா
27-Sep-2024
மக்கள் குறைதீர் கூட்டம் 417 மனுக்கள் ஏற்பு
24-Sep-2024
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளங்காக்கூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. தேரிருவேலி ஊராட்சித் தலைவர் அபுபக்கர் சித்திக் வரவேற்றார்.வருவாய்த்துறை,பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். பின்பு இயற்கை மரணம் உதவித்தொகை, இ-பட்டா, இலவச வீட்டு மனைப் பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை, பிரதமர் நுண்ணீர் பாசன திட்டங்களில் 115 பேருக்கு ரூ.12.88 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு 65 பேர் மனுக்கள் அளித்தனர். பின்பு மக்கள் தொடர்பு திட்டம் நடைபெறும் கிராமங்களில் மக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். அதேபோல் அனைத்துத்துறை மூலம் அமைக்கப்படும் சாதனை விளக்க கண்காட்சிகளை தெரிந்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறினார்.உடன் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தனித்துணை கலெக்டர் தனலட்சுமி, தாசில்தார் சடையாண்டி உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
27-Sep-2024
24-Sep-2024