/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கன்னிராஜபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
கன்னிராஜபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
சாயல்குடி : கன்னிராஜபுரம், ரோஜ்மா நகர், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி மக்கள், மீனவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கன்னிராஜபுரம் மக்கள் கூறியதாவது: சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படும் இப்பகுதியில் அடிக்கடி தொடர் மின்தடை ஏற்படுகிறது. குறிப்பிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய மின் பணியாளர்கள் இல்லை. பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்யவும், பணியாளர்களை நியமிக்கவும் சாயல்குடி துணை மின் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.