சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம்
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.முதுகுளத்துார் -சாயல்குடி ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உட்பட அலுவலக பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தை முறையாக பராமரிப்பு செய்யாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. அப்போது யாரும் இல்லாததால் எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. உதவி பொறியாளர்கள் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் பூட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். பணியாளர்களும் அச்சப்படுகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.